பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் குரங்கு ஒன்று அழுகிய நிலையில் இறந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாபாளையம் கிராமத்தில் வன்னி மலை பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டி உள்ளது. இதில் இருந்து வரும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், அப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பார்த்துள்ளனர்.
அப்போது, தொட்டியில் இறந்து அழுகிய நிலையில் குரங்கு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த நீரை அருகியதால் உடல் உபாதைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.