கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் பக்தர்கள் ஒன்றாக பாடினர்.
கோடி விஷ்ணு நாம பாராயணம் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக நன்மை வேண்டி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை பாடினர். இதில் நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியாதவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.