ஆறு பக்கத்திற்கு பெயர் வைத்திருக்கும் நபர் ஒருவர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அவரது பெயரை உச்சரிக்கவே 20 நிமிடங்கள் தேவைப்படும் என்ற நிலையில், அவர் யார், இப்படி பெயர் வைக்கக் காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.
நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்ற நபர்தான், 6 பக்க பெயருக்கு சொந்தக்காரர்… உலகின் மிக நீளமான பெயருக்கான கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்… ஆமாம் இவ்வளவு பெரிய பெயரை இவரை தவிர வேறு யார் வைக்க முடியும்…
ஆறு பக்க நீளத்திற்கு பெயரை வைத்திருக்கும் லாரன்ஸ் வாட்கின்ஸ், மேற்கு ஆசியா, பாலினேசியா, ஐரோப்பா கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டதுதான் தாமதம், அவரது பெயரை வாக்கியமாக நீட்டி நிமிர்ந்துவிட்டார்…
அவரது பெயரை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க நீதிமன்றமே போராட வேண்டியிருந்த காரணத்தால், உடனடியாக தேசிய சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவரவும் தூண்டியது. சுருக்கமாக அழைக்கப்படும் லாரன்ஸ் வாட்கின்ஸ், சாதனைக்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது. கின்னஸ் உலக சாதனை படைத்த லாரன்ஸின் பெயரில் இரண்டாயிரத்து 253 நடுப்பெயர்கள் உள்ளன, முழுமையாக எழுதும்போது ஆறுபக்கங்களுக்கு நீள்கின்றன…
சிலர் விரும்பும் வித்தியாசமான, அசாதாரணமாக பதிவுகள் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறும் வாட்கின்ஸ், அதில் ஒருவரான தான் இருக்க விரும்பியதாக புன்னகைக்கிறார். கின்னஸ் சாதனையில் முறியடிக்கக் கூடிய சாதனை என்று ஏதாவது உள்ளதா என உலக சாதனை புத்தகத்தை முழுமையாக புரட்டியதாகவும், அப்போதுதான் நீளமான பெயரை சேர்த்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் வாட்கின்ஸ் கூறுகிறார்.
அவரது பெயரில் காதல், கணிதம் போன்ற வார்த்தைகள் மட்டுமல்லாமல் ஷெர்லாக், டயோனிசஸ், டோஃபு என அனைத்தும் இருந்தது. இவ்வளவு பெரிய பெயரை வைத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்துவரவில்லை… அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பொருந்தவில்லை, ஏன் திருமணத்தின்போது பெயரை சொல்ல 20 நிமிடங்கள் மேல் ஆனது என்பதையும் ஒப்புக்கொள்கிறார் லாரன்ஸ் வாட்கின்ஸ்…..
பெயரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது ஒரு காகிதத்தில் கையெழுத்திடுவது போல் எளிதானதாக இல்லை, அது ஒரு முழுமையான நீதிமன்றப் போராட்டமாக மாறியது.
முதலில், மாவட்ட நீதிமன்றம் வாட்கின்ஸின் கோரிக்கையை அங்கீகரித்தது, ஆனால் பதிவாளர் ஜெனரல் அதைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார், இது அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு சாத்தியமற்றது என்று கூறினார். பின்னர் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
வாட்கின்ஸின் பழைய நியூசிலாந்து பாஸ்போர்ட்டில் அவரது அனைத்து பெயர்களும் பொருந்தும் வகையில் கூடுதலாக ஆறு பக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன, அதே நேரத்தில் அவரது பிறப்புச் சான்றிதழின் பின்புறத்தில் மேலும் ஆறுபக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
அவரது வழக்குக்குப் பிறகு, வேறு யாரும் இதேபோன்ற சாதனையை முயற்சிப்பதைத் தடுக்க நியூசிலாந்தில் இரண்டு சட்டங்கள் திருத்தப்பட்டன என்பதுதான் இதில் ஹைலைட்டே…