தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பண்டிகைக்கான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வாங்கிச் சென்றனர். ரங்கநாதன் தெருவில் திரளான மக்கள் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
===