அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டாரன்ட் கவுண்டியில் உள்ள விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து தரையில் விழுந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த வாகனங்கள் மற்றும் கட்டிங்களுக்கும் பரவியது.
இதையடுத்து அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.