புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகேயுள்ள வல்லநாட்டு கண்மாயின் கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது.
மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு சார்பில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் செயல் தலைவருமான சுரேஷ்குமார் மற்றும் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டு கண்மாயின் கரையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய நீதிபதி சுரேஷ் குமார், கண்மாய் கரையில் உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பிகள் தாழ்வாகச் செல்வதாகத் தெரிவித்தார்.
இதனை மாற்றித்தராமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.