வேலூர் மாவட்டம் லத்தேரியில் கனமழை காரணமாகக் கானாற்று ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக லத்தேரி அருகே உள்ள பள்ளத்தூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் கானாற்றில் கலந்தது. கானாற்று ஏரி முறையாகத் தூர்வாரப்படாததால், தண்ணீர் நிரம்பி ஏரியின் கரை உடைந்து கோரைப்பட்டரை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கானாற்றில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.