இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மாணவி இரவு 12.30 மணிக்குக் கல்லூரி வளாகத்துக்கு வெளியே சென்றது எப்படி? பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கப்படக் கூடாது எனக் கூறினார்.
மேலும், விடுதிகளில் தங்கும் மாணவர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தனியார் கல்லூரிகள் வளாகத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில் மம்தா பானர்ஜி-ன் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.