அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசுத் துறை கடந்த 1-ம் தேதி முதல் முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தற்காலிகமாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
பலர் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அனைத்து நிதியையும் பயன்படுத்தி ராணுவ வீரர்களுக்கு அக்டோபர் 15-ம் தேதி ஊதியம் வழங்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.