தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுவரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 337 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாக மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தங்கத்துக்கு உலகின் முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியாவில், பொருளாதார காரணிகள் மற்றும் முதலீட்டு தேவையால், தங்கம் அதிகளவில் வாங்கப்படுவதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாகச் சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்கம் தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, நகைகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.