ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவால் உணவகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தன.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், அங்குச் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நர்சூ–சம்ரோலி பகுதியில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், உணவகம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த பல கட்டிடங்களும் நொடிப் பொழுதில் இடிந்து விழுந்தன.
இதையடுத்து, நிகழ்விடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர்மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.