காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!
Oct 30, 2026, 12:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகிறது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து கடுமையான போர் நடந்து வருகிறது.

இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என, டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.

இந்நிலையில், எகிப்தில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் – சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எகிப்து செல்லும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வருவதை கேள்விப்பட்டதாகத் தெரிவித்தார்.

போர்களைத் தீர்ப்பதிலும் சமாதானம் செய்வதிலும் தாம் சிறந்தவன் எனப் பெருமை பேசிய டிரம்ப், ஆப்கன்-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்த முயற்சிப்பேன் எனக் கூறினார்.

Tags: Gaza War: Final phase of agreement signed in Egyptகாசா போர்இறுதி கட்ட ஒப்பந்தம்usagazaDonald TrumpIsraeli attack.
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

Next Post

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

Related News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies