சவூதி அராம்கோ எண்ணெய் வயல் மற்றும் தம்மம் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில், 3 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர்.
எண்ணெய் வயலை நோக்கி வந்த ட்ரோனை வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்தபோது, அதன் சிதறல்கள் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
விமான நிலையத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
















