ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பாதிப்பக்கப்படாது என, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் குறித்த தொழில்துறை மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடியின் “வசுதேவ குடும்பகம்” என்ற தொலைநோக்கு சிந்தனையின்படி, “ஒரே பூமி, ஒரே எதிர்காலம், ஒரே குடும்பம், ஒரே AI” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நல்லதை மேம்படுத்தி தீமைகளைக் குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காமகோடி, ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது என்று தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்து கொள்வது அவசியமாக உள்ள நிலையில், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
















