ஆந்திர மாநிலம் கலவை குண்டா அணை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரக்கூடிய தொடர் மழை காரணமாக அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாலாஜா தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.