இஸ்ரேல் காசா இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காசா இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீண்ட மற்றும் கடினமான போர் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத சாதனையாக, இந்தப் பிராந்தியத்தின் பெரும்பான்மையான நாடுகள், காசா ஆயுதமற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும் மற்றும் ஹமாஸ் ஆயுதத்தைக் கைவிட வேண்டும் என்ற திட்டத்தை ஆதரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.