மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஸோஹோ நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட NIC, பல தசாப்தங்களாக அரசு மின்னஞ்சல் உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது.
2022-ம் ஆண்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த இணைய தாக்குதல், அரசு டிஜிட்டல் உள்கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்யத் தூண்டியது.
இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஜோஹோவுக்கு மின்னஞ்சல் சேவைப் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதன் மூலம் கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஸோஹோ நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
word கோப்புகள், PDF ஆவணங்கள், power point உருவாக்க ஓப்பன் சோர்ஸ் செயலிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க, ஸோஹோவின் செயலி தொகுப்பு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.