அசாம் மாநிலம் திப்ருகரில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசாம் தேயிலை என்பது உலகம் முழுதும் பிரபலம். இதன் உன்னதமான சுவையால் இந்தத் தேயிலைக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இவ்வாறு சிறப்பு மிக்க இந்தத் தேயிலை நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.