முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கைக் கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலி பகுதியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், விழாவில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இலங்கைச் சிதறினால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த ராஜிவ் காந்தி, இலங்கைக்கு அமைதி படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி வகுத்த இலங்கைக் கொள்கை தோல்வியில் முடிய இந்திய ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் எனவும் அவர் கூறினார்.