தெற்காசிய பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லிக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 12ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை ஆராய நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவைத் தெற்காசிய பல்கலைக்கழம் அமைத்தது.
10 நாட்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் , மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக டெல்லிக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.