கேரளாவில் தற்கொலைச் செய்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவந்த ஆனந்த் அஜி, தாம் வசித்துவந்த விடுதியில் தற்கொலைச் செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் கேரளப் பிரிவு மூத்த நிர்வாகி ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆனந்த் அஜி-யின் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்றும் வேதனையானது என்றும் தெரிவித்துள்ளார்.
அவரின் அகால மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், உயிரிழக்கும் முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தற்கொலைக் குறிப்பு ஆகியவைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனந்த் அஜி தற்கொலைக் குறிப்பில் சந்தேகத்திற்குரிய சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், இதுகுறித்துப் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும் காவல்துறையினரிடம் கோட்டயம் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மனு அளித்துள்ளதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார்.