நீங்க அழகா இருக்கீங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
எகிப்தின் ஷர்ம் அல்-லேக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்கக் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது.
இதில் எகிப்து அதிபர் அல்-சிசி, துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று கூறினர்.
மேலும் இதனை அமெரிக்காவில் தான் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தப் பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.