குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம், அதன் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறைச் சோதனை நிறைவு பெற்றது.
மத்தியபிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள இருமல் மருந்து நிறுவனம், அதன் உரிமையாளர் ரங்கநாதன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாகத்துறைச் சோதனை நடைபெற்றது.
சுமார் 12 மணி நேரமாக நடைபெற்ற சோதனைக்குப் பிறகு முக்கிய ஆவணங்கள், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.