திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உங்களுடன் ஸடாலின் திட்ட முகாமிற்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதற்குப் பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாமலேரிமுத்தூர் பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. அதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக முதன்மைக் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றே பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பள்ளி வேலை நாளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தியதற்குப் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.