லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகப் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
டியூட் படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் பேசிய அவர், லவ் டுடே 2 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பும், அதற்கான கதையின் யோசனையும் தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
ஆனால், தான் அதை இப்போது செய்ய மாட்டேன் எனவும், வேறு சில கதைகளில் கவனத்தைச் செலுத்தவுள்ளேன் எனவும் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.