இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் என எம்பாப்வே புகழாரம் சூட்டியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே, கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இருந்தாலும் இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார் எனக் கூறியுள்ளார்.