உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2025 அக்டோபரில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது.
இந்தத் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடர் 2025- 2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில், 66.67 சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.