மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மலேசியாவில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டுமே 97 பேர் இன்புளுன்யசா காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் கூறி இருந்தது.
இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் மலேசியாவில் 6000 பள்ளி மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இதையடுத்து, சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.