ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் ஏஐ மையம் அமைய இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஏஐ மையம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை எடுத்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இது நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர், உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்க இந்த ஏஐ மையம் உதவியாக இருக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.