இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலாகி உள்ள நிலையில் காசாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த போரானது அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் முடிவுக்கு வந்தது.
இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் மற்றும் காசாவைச் சேர்ந்த துக்முஷ் (Dughmush) இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.
இதனால் இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஹமாஸைச் சேர்ந்த 8 பேரும், துக்முஷ் குலத்தைச் சேர்ந்த 19 பேரும் உயிரிழந்தததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் போர் நிறைவடைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட பாலஸ்தீனியர்கள் உள்நாட்டுப் போரால் அதிருப்தியில் உள்ளனர்.