பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 பேர்க் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மற்றும் ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
அதேபோல் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா கட்சிகளுக்குத் தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதற்கட்டமாக 9 பெண்கள் அடங்கிய 71 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி, துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதலமைச்சர் விஜயகுமார்ச் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
மேலும் அமைச்சர்கள் நிதின் நபின் பங்கிபூர் தொகுதியிலும், ரேணு தேவி, பெட்டியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.