இளைஞர்கள் போராட்டங்களால் மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடாகும்.
உலகின் நான்காவது பெரிய தீவான மடகாஸ்கரில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறுமை, ஊழல், மோசமான நிர்வாகம் உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் பதவி விலகக் கோரியும் நடைபெற்று வந்த இளைஞர்களின் போராட்டம் முழுமையான எழுச்சியாக மாறியது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது.
போராட்டக்காரர்களுடன் ராணுவம் இணைந்து சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகக் கூறி அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், மடகாஸ்கரின் ராணுவம் இந்தியப் பெருங்கடல் தீவைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ கர்னல் தெரிவித்துள்ளார்.