ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 08:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் படித்த உயர்தட்டு மக்கள் தேசப் பக்தியையும் உள்ளூர் அடையாளங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் விளக்கியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் போட்டியாக, ZOHO நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீதர் வேம்பு, பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பர்  குறிக்கோளின் படியே, தனது நிறுவனத்தையும் MADE IN INDIA -MADE FOR GLOBE என்று உருவாக்கியுள்ளார்.

நகர்ப்புற இந்தியர்களிடையே மறைந்து வரும் தேசிய உணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு,தனது நிறுவனத்தின் வெற்றிக்கு ZOHO ஊழியர்களின் தேசப் பக்தியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கல் என்பது பல நகர்ப்புற இந்தியர்களை  தங்கள் வேர்களிலிருந்து பிரித்து விட்டது என்றும், அதனால் அவர்கள், இந்தியாவின் குடிமக்கள் என்ற உணர்வை இழந்து விட்டனர் என்றும், அதற்கு மாறாகத் தங்களை ஒரு “உலகளாவிய குடிமக்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையான தேசிய உணர்வின் வெளிப்பாடுகளாக உள்ளூர் மொழிகளையும் தங்கள் மாநில அடையாளங்களையும் இந்திய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் உள்ள மாநில மொழிகளைக் கற்றுக்கொண்டு பரந்த பாரதத்தின் கலாச்சார மற்றும் மொழியியல் பெருமையை மீண்டும் உயிர்ப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீதர் வேம்பு, எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்தந்த மாநில மொழிகளில் பேசக் கற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் இளைஞர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற இந்தியாவுக்கும், நகர்ப்புற இந்தியாவுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தேசம் சொந்தம் என்ற நாட்டுப் பற்று வலிமையாக உள்ளது என்றும், நகர்ப்புற மேல்தட்டு மக்களிடையே அது மறைந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

தன்னையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஒரு சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ZOHO வின் தலைமை அலுவலகத்தை வைத்திருப்பதைப் பெருமையுடன் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்புகளைப் பரவலாக்குவதற்கும் உள்ளூர்த் திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் கிராமப்புறங்களில் அலுவலகங்கள் மற்றும் பயிற்சி மையங்களைக் கட்டி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ZOHO வெற்றிகரமாகச் செயல்படுவது தம்மால் அல்ல என்றும், தாம் ஒரு மேதை அல்ல என்றும், ZOHO வின் அனைத்து ஊழியர்களும் தேசிய உணர்வுடன் இருப்பதால், நாட்டுக்காக ZOHO வை வெற்றிகரமாக்க வேண்டும் என்று உழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் வேகமான வளர்ச்சிக்குத் தேசிய பெருமை மற்றும் தேசத்தின் மீதான நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கையே அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். உலகமயமாக்கல் தலைகீழாக மாறும்போது, ​​இந்தியா அதன் சொந்தப் பரந்த உள்நாட்டுச் சந்தையை நம்பியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்,

4 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக அதிகரித்து வரும் சூழலில், தொழில்நுட்பத் துறையிலும் நாடு தன்னிறைவு பெறவும், மற்ற நாடுகளுடன் சமமாக வர்த்தகம் செய்யவும் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கள் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

Tags: ZOHOஸ்ரீதர் வேம்புPatriotism is the reason for ZOHO's success: Sridhar Vembu is proud
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

Next Post

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies