ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்...!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 08:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பணியாளர்களின் ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமைப்படுத்தும் வகையில், PROVIDENT FUND தொகைப் பெறும் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் EMPLOYEES PROVIDENT FUND ORGANISATION என்ற அமைப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுகால நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது புதிய வடிவமான EPFO 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது PROVIDENT FUND தொகைப் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அவற்றை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றியமைத்துள்ளது. 30 கோடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை, ஊழியர்கள் தங்களது மொத்த PROVIDENT FUND நிதியில் இருந்து பென்ஷனுக்கான 25 சதவீதத் தொகையை விடுத்து, மீதமுள்ள 75 சதவீதத் தொகையை எடுக்க வழிவகுக்கிறது.

இதனால் ஊழியர்கள் அனைவரும் தங்கள் அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன், ஓய்வுகால பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள முடியும். முன்னதாக PROVIDENT FUND தொகையைப் பெற 13 விதமான பிரிவுகள் மற்றும் சிக்கலான நிபந்தனைகள் இருந்தன. தற்போது அவை ஒருங்கிணைக்கப்பட்டு ESSENTIAL NEEDS என்னும் அத்தியாவசிய தேவைகள், HOUSING NEEDS என்னும் வீட்டு தேவைகள் மற்றும் SPECIAL CIRCUMSTANCES என்னும் சிறப்பு சூழ்நிலைகள் ஆகிய 3 முக்கிய பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இது PF தொகைப் பெறும் நடைமுறையைப் பெரிதும் எளிமையாக்கியுள்ளதுடன், முன்பிருந்த அனைத்துக் குழப்பமான விதிமுறைகளையும் நீக்கியுள்ளது. குறிப்பாகக் கடந்த காலங்களில் திருமணம், கல்வி, வீடு வாங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு, PF தொகையை எடுக்கத் தனித்தனியாக 5 முதல் 7 ஆண்டுகள் வரைச் சேவை தேவைப்பட்டன. ஆனால், தற்போதைய புதிய விதிகளின்படி எந்தக் காரணத்திற்காகவும் PF தொகையைப் பகுதி அளவில் பெற, 12 மாத சேவைக் காலமே போதுமானது.

மேலும், முன்பு உடல்நலக்குறைவு, வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக PF தொகைக் கோர ஆவணங்கள் கட்டாயமாக இருந்தன. ஆனால் தற்போது “சிறப்பு சூழ்நிலைகள்” என்ற பிரிவில் PF தொகைக் கோரும் ஒருவர் அதற்கான காரணத்தைக் கூற அவசியமில்லை.

அதேபோல, புதிய நடைமுறையின் கீழ்த் திருமணம் மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்கு PF தொகைக் கோரும் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி தேவைகளுக்கு 10 முறை வரையிலும், திருமண தேவைகளுக்கு 5 முறை வரையிலும் PF தொகையைக் கோர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இவற்றுக்கு 3 முறை மட்டுமே அனுமதி இருந்தது. அதேவேளையில் வேலை இழப்புக்குப் பின் PF தொகையை முழுமையாகப் பெறும் விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முன்பு ஊழியர்கள் முழு தொகையையும் 2 மாதங்களில் பெற முடிந்த நிலையில், தற்போது PF தொகையைப் பெற 12 மாதங்களும், பென்ஷன் தொகையைப் பெற 36 மாதங்களும் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், EPFO 3.0 ஒரு நீண்டகால நிதி பாதுகாப்பை நோக்கிய தீர்மானமாக இருந்தாலும், அடிக்கடி வேலை இழப்புகள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் இது சில ஊழியர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம் EPFO 3.0 தனது டிஜிட்டல் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட, AUTO SETTLEMENT SYSTEM என்ற தானியங்கி கோரிக்கைச் செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் PF தொகைக்கான கோரிக்கைகள் மனிதத் தலையீடுகள் இன்றி விரைவாகவும், வெளிப்படையாகவும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளில் உள்ள சிக்கல்களைக் குறைத்து ஒரே மாதிரியான நடைமுறையுடன் PF தொகையைப் பெற EPFO 3.0 வழிவகைச் செய்துள்ள நிலையில், இது ஓய்வூதிய நிதி மேலாண்மையில் திறன், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைக்க ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

Tags: epfEPFOUANEPFO 3.0 simplifies pension fund management: Now you can have your PF amount in just a few CLICKS.today epfo
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

Next Post

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies