உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைதிக்காப்பு படைகளுக்கு வீரர்களை அனுப்பி பங்களிப்பு செய்யும் நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் மாநாடு இன்று முதல் 16-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை இந்தியா முதல்முறையாகத் தலைமை தாங்கி நடத்துகிறது. இந்நிலையில் மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உலக நாடுகள் பலவற்றில் அமைதிக்காப்பு பணிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள் எனக் கூறினார்.