உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்தக் கருத்து தொடர்பாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமாரைச் சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை, அக்டோபர் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கத் திண்டுக்கல் மாவட்ட ஜே எம் 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நிர்மல்குமாருக்குத் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.