நீலகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் அண்மையில் உயிரிழந்தன.
அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்ட முதுமலைப் புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாகக் காட்டு பன்றிகள் உயிரிழந்தன.
இந்த நிலையில், முதுமலை, தெப்பக்காடு பகுதியில் உயிரிழந்த ஆறு காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு இந்த நோய் பரவாது என்பதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.