விழுப்புரம் அருகே பொதுமக்கள் மீது போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைப் பகுதியில் 4 இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் தகராறு செய்தனர்.
அப்போது கத்தி மற்றும் கண்ணாடி பாட்டில்களால் தாக்கியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்துப் பாதிக்கப்பட்ட அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.