அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக நேரடி வரி வருவாய் வசூல் பிரிவு உள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் 6.33 சதவீதம் அதிகரித்து, 11 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடப்பாண்டு கார்ப்பரேட் நிறுவன வரிகள் 4 லட்சத்து 91 ஆயிரம் கோடியில் இருந்து, 5 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், தனிநபர்கள் உள்ளிட்ட பிற வரிகள் 5 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.