கோவை மாவட்டம கருமத்தம்பட்டியில் மதுபானத்தைப் பாரில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனைச் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.
அதன் எதிரொலியாகப் பாரில் சோதனை நடத்திய போலீசார், சட்டவிரோதமாக மதுவைப் பதுக்கி வைத்த இருவரை கைது செய்து செய்தனர்.
பாரில் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.