அமெரிக்க விமான படை தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பதுக்கியதாக, இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளராகவும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகரமாகவும் இருப்பவர் ஆஷ்லே டெல்லிஸ். இந்நிலையில் வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதன் பேரில் இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்து மரியாதைக்குரிய குரலாகக் கருதப்படும் டெல்லிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.