தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது.
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கமானது கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கொசஸ்தலை ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆட்டரம்பாக்கம், ஒதப்பை உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.