தலைமுடி இல்லாத தனது புகைப்படத்தை வெளியிட்டதால் டைம் பத்திரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
டிரம்பைப் புகழும் வகையில் டைம் செய்தி நிறுவனம், அட்டையில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அதில், காசாவில் பிடித்து வைக்கப்பட்ட பணயக் கைதிகள், டிரம்பின் முதல்கட்ட அமைதி திட்டத்தின் கீழ் விடுதலையானார்கள். அப்போது பாலஸ்தீனிய கைதி ஒருவரும் விடுவிக்கப்பட்டார். டிரம்பின் 2-வது பதவி காலத்தில் மிகப் பெரிய சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
இதன்படி, மத்திய கிழக்கு பகுதியில், ஒரு மூலோபாயத் திருப்புமுனையாக காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமையும் என அவருடைய பெருமையைக் குறிப்பிட்டு உள்ளது. அதற்கு டிரம்பின் வெற்றி எனத் தலைப்பும் இட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்ட டிரம்ப், தன்னைப் பற்றி டைம் இதழ் நல்ல முறையில் கட்டுரையை வெளியிட்டு உள்ளது. ஆனால், அவர்கள் வெளியிட்ட புகைப்படம், எல்லாக் காலத்திலும் படுமோசமான ஒன்று. தன்னுடைய முடியை அவர்கள் மறைத்து விட்டனர்.
காற்றில் பறப்பது போன்று சில முடிகள் காணப்படுகின்றன. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இப்படி? என்று ஆவேசத்துடன் பதிவிட்டு உள்ளார்.
எனினும் இந்தப் பதிவுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். 6 ஆயிரத்து 800-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களைப் பதிவிட்டு உள்ளனர்.