உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது எனப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்தார்.
பின்னர் பிரிட்டன் திரும்பிய அவர் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாகும் பாதையில் இந்தியா பயணித்து வருகிறது எனக் கூறினார்.
தனது இந்திய பயணத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள முதலீடுகள் மூலம் பிரிட்டனுக்கு 15350 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், 10600 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.