ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழைக் காரணமாக 144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழைப் பெய்து வருவதாலும், பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் மாவட்ட முழுவதிலும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 369 ஏரிகளில் 144 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
35 ஏரிகள் 99 சதவீதமும், 51 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், மேல்புலம் ஏரி நிரம்பி கலவை – மாம்பாக்கம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.