அமேசான் நிறுவனம் தனது மனிதவளத் துறையில் 15 சதவீத ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகப் பார்ச்சூன் பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் துறையான பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் டெக்னாலஜி (PXT) பிரிவு இந்தப் பணிநீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இது மட்டுமல்லாமல், அமேசானின் முக்கிய நுகர்வோர் வணிகப் பிரிவுகளிலும் சில பணியிடங்கள் குறைக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
அமேசான் ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளில் 25000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. தற்போது மீண்டும் பணி நீக்கப் படலம் தொடங்குவதால் டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.