வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக – ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரவட்லா, கொத்தூர், பாஸ்மார்பெண்டா உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும் மழைநீர் வடிய வழியில்லாததால் பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.