இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கான தபால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குவதாக தபால் துறை கூறியுள்ளது.
புதிய கட்டண விதியின் கீழ், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.