திமுகவின் ஆட்சி விரைவில்தூக்கி எறியப்பட வேண்டும் என காத்திருக்கும் வடசென்னை மக்களின் அவலக்குரலின் வீடியோவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்” என்ற முழக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 4-வது நாளான நேற்று வடசென்னையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், லேசான மழை பெய்தாலேயே சென்னையில் அனைத்து பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றம் சாட்டினார்.
பாக்ஸ்கான் நிறுவனத்தை தாங்கள் தான் கொண்டு வந்தோம் என, யாரோ பெற்றெடுத்த குழந்தைக்கு, தி.மு.க., பெயர் வைக்கிறது. அதை, பாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது என்றார்.மேலும், திமுக ஆட்சியில் வடசென்னை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
முன்னதாக வடசென்னை மக்களின் அவலக்குரல் என்ற தலைப்பில் வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டார்.