ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள மேலும் 8 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதில் முதல் குற்றவாளியான நாகேந்திரன் அண்மையில் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்ததால் அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதேபோல் வழக்கில் சதிஷ், சிவா ஆகிய இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சிறையில் உள்ள மேலும் 8 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.